
Spared Coconut Grove
(Original poem by Bharaithyar)
1. Among the fields - On the bank of a luxuriant pool Not a soul in sight - I came in solitude, seeking comfort; 2. When a squall blew through - The trees - could they even be counted? Like seedlings they scattered, All over the land. 3. On a small embankment Stood a tiny coconut grove - Poor man’s property, Not pulverized by the storm. 4. Some were felled – the trees, But several remained Spared by the God of Wind, So, it(grove) should live. 5. I have seen solitude – In that there is relish, Mist extinguishing sunshine – Honey treacle’s sweetness,
6. Sun bears witness from sky - Like a joyful sphere of light, Dispersing everywhere – Shining rays in a joyous song. 7. Between the standing trees – Under a small shade I stood, Forever in poetry – Realizing the permanence of joy. 8. Praise to Parasakthi1 – Whoever sings your praise shall live and prosper Praise to Parasakthi – this is my Word, forget it not!
1 Parasakthi is an avatar of Parvathi, who is Siva’s wife. Parasakthi also means the great energy that is found in everything in this universe – that propels and moves and animates.
Note: This poem is the poet’s revelry in solitude when he witnesses a sudden squall blow through a field of what appears to be several coconut groves. Among the many destroyed groves he sees one that was spared, which happened to belong to a poor man. This scene along with the clearing skies, brings him boundless joy.
பிழைத்த தென்னந்தோப்பு
– சுப்ரமணிய பாரதியார்
வயலிடை யினிலே–செழுநீர் மடுக் கரையினிலே, அயலெவரு மில்லை,-தனியே ஆறுதல் கொள்ள வந்தேன். 2. காற்றடித் ததிலே,-மரங்கள் கணக்கிடத் தகுமோ?- நாற்றினைபோ லே-சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே. 3. சிறிய திட்டையிலே-உளதோர் தென்னஞ் சிறுதோப்பு- வறியவ னுடைமை-அதனை வாயு பொடிக்கவில்லை. 4. வீழ்ந்தன சிலவாம்-மரங்கள் மீந்தன பலவாம்; வாழ்ந்திருக்க வென்றே-அதனை வாயு பொறுத்துவிட்டான். 5. தனிமை கண்டதுண்டு;-அதிலே ஸார மிருக்குதம்மா! பனிதொலைக்கும் வெயில்,-அது தேம் பாகு மதுரமன்றோ; 6. இரவி நின்றிதுகாண்-விண்ணிலே இன்ப வொளித்திரளாய்; பரவி யெங்கணுமே-கதிர்கள் பாடிக் களித்தனவே. 7. நின்ற மரத்திடையே-சிறியதோர் நிழலினி லிருந்தேன்; என்றுங் கவிதையிலே-நிலையாம் இன்ப மறிந்துகொண்டேன். 8. வாழ்க பராசக்தி!-நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்; வாழ்க பராசக்தி!-இதையென் வாக்கு மறவாதே!