
Prayer to God
(Original poem by Bharaithyar)
How many crores1 of joy You fashioned!
Our Lord! O, Lord! O, Lord!
Spirit with matter – You melded
To forge the Five Elements,
Creating Heaven and Earth,
All those worlds, a treasure of colors –
A profusion of resplendent beauty.
Blissfulness is a state You created,
Where the awakened soul is fully realized,
Piety is a state You created –
Our Supreme! O, Supreme! O, Supreme!
1 – One crore is equal to ten million units.
இறைவனை வேண்டுதல்
[ராகம் – தன்யாசி]
எத்தனை கோடி யின்பம் வைத்தாய்-எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ-எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு
சேருமைம் பூத்தது வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய் (ஓ-எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முணறு முணர் வமைத்தாய்
பக்தி யென்றொரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா, பரமா, பரமா. (ஓ–எத்தனை)