Bharathiyar Poems – Liberation – Little Sparrow

Liberation – Little Sparrow

(Original poem by Bharaithyar)

Stay liberated –
Like this little sparrow

In eight directions, it flies and roams,
Into the air, it ascends; swims rapidly through,
In measureless abundance lay,
The sky awash in light, is the nectar it savors

Converse felicity with the she-sparrow, in exultation;
Free of affliction, build a nest
Nurture the hatchling that emerges from the egg and rejoice,
First feed the youngling, engulf in love.

From the yards of homes and open fields,
Gather the grains that are found, bring home and partake;
In other times, tell stories and slumber; afterward
Long before dawn, sing a song and wake up.

விடுதலை-சிட்டுக் குருவி

பல்லவி

விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டு குருவியை போலே

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறிய காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டு படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னு மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாதோர் கூடுகட் டிக்கொண்டு
முட்டை தருங்க்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதைசொல்லி தூங்கிபின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

Comments are closed.

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: